/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தங்க நகை திட்டத்தில் ரூ.50 லட்சம் மோசடிதங்க நகை திட்டத்தில் ரூ.50 லட்சம் மோசடி
தங்க நகை திட்டத்தில் ரூ.50 லட்சம் மோசடி
தங்க நகை திட்டத்தில் ரூ.50 லட்சம் மோசடி
தங்க நகை திட்டத்தில் ரூ.50 லட்சம் மோசடி
கோவை : தங்க நகை திட்டத்தில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்ய, 23 பேர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.
மாதாமாதம் பணம் வருவதை உறுதி செய்து கொண்ட நகை வியாபாரி, மேலும் 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். இதற்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு மாதம் ஊக்கத்தொகை கொடுத்தார். அதன் பின் ஊக்கத்தொகை வருவது நின்று விட்டது. வினித் சர்மாவிடம் கேட்டபோது, காலம் கடத்தி பல மாதங்கள் ஊக்கத் தொகை மற்றும் டிபாசிட் தொகையை தராமல் இழுத்தடித்தார். ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அபிஷேக் உள்ளிட்ட 23 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் செல்வராஜூக்கு கமிஷனர் உத்தரவிட்டார். போலீசார் விசாரித்தபோது, 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஏமாற்றப்பட்டிருந்தது, கண்டுபிடிக் கப்பட்டது. வினித் சர்மா மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.